புதுடெல்லி, கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 20 ம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை 30% முதல் 22% வரை குறைப்பதாக அறிவித்தார். அதே நேரத்தில் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த விகிதம் 25% முதல் 15% வரை குறைக்கப்பட்டது. மத்திய தர வர்க்கத்தினரிடையே நுகர்வை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வருமான வரி விதிப்பு அடுக்குகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத இரண்டு அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
மறுஆய்வு செய்து பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப புதிய வருமான வரிச் சட்டம் : மத்திய அரசு முடிவு