ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆலியா மானஸா. அவர் அதே தொடரில் தனக்கு கணவராக நடித்த சின்னய்யா அதாங்க சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சஞ்சீவால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் அவர் விரைவில் அப்பா ஆகப் போகிறார். ஆமாங்க, நம்ம செம்பா கர்ப்பமாக இருக்கிறாராம்.