சமூக அக்கறை கொண்ட படம்

சமூக அக்கறையை மையப்படுத்திய ஒரு படம். எனக்கு எனது வாழ்க்கையில் நடந்து வரும் சம்பவத்தோடு ஒன்றிருப்பது போன்று இந்த கதை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக எனக்கு அநீதி நடந்து கொண்டே இருக்கிறது. அதனால், இந்தப் படத்திற்கு வந்திருக்கிறேன். உபாஸ்னா உங்களுக்கு கோலிவுட்டில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இங்கு தமிழியன்ஸ்க்கு தான் எதிர்காலம் இல்லை. மற்ற நடிகைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
மீரா மிதுன் - ஐபிசி பிரிவு

சோஷியல் மீடியா செக்சன் 499, 500 ஐபிசி ஆகிய பிரிவுகள் தான் பெரிய குற்றப்பிரிவு. புகார் கொடுத்தால், உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும். இதையடுத்து சம்பந்தப்பட்டவரை விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். இது போன்ற நமது நாட்டில் நடக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 60 சதவீத வழக்குகள் சமூக ஊடக துன்புறத்தல் மூலமாகவே பெண்களுக்கு நிகழ்கிறது.
கருத்துக்களை பதிவு செய் இசை வெளியீடு

இவ்வளவு ஏன், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஐடி நிறுவன ஊழியரைச் சந்தித்தேன். என்னுடைய மொபைலில் ஒரு சின்ன சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணிய பிறகு உங்கள் மொபைல் அருகில் எனது மொபைலை வைத்தேன் என்றால் எளிதாக உங்களது டேட்டாவை என்னால் எடுக்க முடியும் என்கிறார். இந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆண்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதில்லை. மாறாக, பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
மீரா மிதுனின் பேச்சுரிமை

ஒருவர் மீது உள்ள கோபத்திற்கு பழி தீர்க்கும் பொருட்டே இது போன்ற சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறார்கள். சுதந்திரமாக பேசுவதற்கு நம் நாட்டில் அங்கீகாரம் கொடுத்திருக்கும் நிலையில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் பேசுவதற்கு இடமில்லை. பேசுவதற்கு இருக்கும் உரிமையை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.
ஊழல் தடுப்பு ஆணையம் - தமிழ்நாடு மாநில இயக்குநர் பதவி

ஊடக நண்பர்களாகிய நீங்கள்தான் எங்களுக்கும், மக்களுக்கும் இடையில் இருக்கும் மிகப்பெரிய பாலம். உண்மையை மட்டும் எழுதி இந்த இடைவெளி சீராக இருந்தால் பிரச்சனை இல்லை. அண்மையில், ஊழல் தடுப்பு ஆணையத்திற்கான தமிழ்நாடு மாநில இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டதற்கு பிறகு நிறைய அதிகாரிகள் பயந்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். எனது புகைப்படத்தை எல்லா பார்ன் சைட்டில் வெளியிட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.
சோஷியல் மீடியா

முதலில் ஆள் வைத்து அடிப்பது என்று இருந்த நமது நாடு தற்பொது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு ஒருவரை பழிவாங்க சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட தருணத்தில், இது போன்ற ஒரு படத்தை இயக்குநர் ராகுல் எடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.
மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

இதையடுத்து, மீரா மிதுனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஊழல் தடுப்பு ஆணையத்திற்கான தமிழ்நாடு மாநில இயக்குநர் பதவி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மீரா மிதுன் கூறுகையில், ஊழல் தடுப்பு என்பது ஒரு நிறுவனம். இது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இதற்கு தனிக்குழுமம் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு இயக்குநர் இருக்கிறார். ஆகையால் தான் எனக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலேயும் வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பதவியை நான் காசு கொடுத்து வாங்கியிருக்கிறேன் என்று கூறி வருகிறார்கள்.
மீரா மிதுன் பிரச்சனை

இதற்கு தேர்வு எழுதி, இண்டர்வியூவில் கலந்து கொண்டு சரியான நபரால் வாங்கிய ஒரு பதவி. லஞ்சம் இல்லா ஒரு மாநிலத்தை உருவாக்குவதே எனது நோக்கம். லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் வேலை செய்யாமல் இருந்தது எனது பிரச்சனைக்கு முக்கிய காரணம். என்னைப் போன்று மக்களும் இது போல் அவதிப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த மாதம் பதவி ஏற்க இருக்கிறேன். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து எனது திட்டம் குறித்து தெரியப்படுத்துவேன். புகார் கொடுத்த ஒரு வாரத்தில் நான் நடவடிக்கை எடுப்பேன். இதில் எந்த அதிகாரிகள் ஈடுபட்டிருந்தாலோ அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மீரா மிதுன் அதிரடி நடவடிக்கை

மீரா மிதுனின் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் முதலில் சிரித்தனர். அதன் பிறகு அவர் பேசுவதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்டு யோசிக்கத்தொடங்கிவிட்டனர். இவ்வளவு ஏன், மீரா மிதுன் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு பின்பு நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி கூட ஏளனமாக சிரித்துக்கொண்டிருந்தார். இறுதியில், அவரே மீரா மிதுனிடம் கேள்வி கேட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பேசிய இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ் பெண்களால் தான் நாட்டில் தப்பு, கொலை, கொள்ளை சம்பவம் நடக்கிறது என்று பேசினார். குறிப்பாக பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி பேசினார். அதில், தப்பு நடந்ததற்கு பெண்கள் தான் காரணம் என்றார். இதற்கு தற்போது பல தரப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
மேலும் படிக்க : சினிமா செய்திகள்
- வைரலான வீடியோ: அசிங்கப்படுத்திய 'அவர்' ரசிகர்கள், நயன் ரசிகாஸ் பொளேர்
- அதுக்கு இன்னும் வயசு இருக்கு, இப்பவே என்ன அவசரம் ப்ரியா?
- விஜய் செய்தது தப்பே இல்லை: ஆனால், கங்கனாவை பார்த்தால் பேபிமா மாதிரி இருக்கே
- Adithya Varma விக்ரம், த்ருவ் தலையில் இடியை இறக்கிய சினிமா ராட்சசன்
- கட்சியும் வேண்டாம், பதவியும் வேண்டாம், ஆளை விடுங்க: மனம் மாறிய ரஜினி?
(Tamil News from Samayam Tamil , TIL Network)
அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ
ஒரே கடி ஆளே குளோஸ்.. ஆனால் இங்கு நடந்ததே வேறு...
உங்களால் இந்த வீடியோவை சிரிக்காமல் பார்க்கவே...
குத்துன்னா இது குத்து...! செம கலக்கல் டிக் ட...
இந்த வீடியோவை பார்த்துட்டு சிரிக்காமல் உங்கள...
சென்னையை என்ன செய்யவிருக்கிறது மகா புயல்!
டிக் டாக் மோகம்..! நொடியில் உயிரை விட்ட வாலிப...
வீடியோ
விமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...
குடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...
ரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா
தந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்!
அமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...
குஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்!