நள்ளிரவில் சூரியன் தெரியுமா? என்னங்க ஒளறிட்டு இருக்கீங்க.. சூரியன் இல்லாம போனாதான அது இரவுனு சொல்வாங்கனு நீங்க வாய்விட்டு கேக்குறது நல்லா தெரியுது. ஆனா நிஜமாவே நள்ளிரவில் சூரியன் ஒளி வீசும் பல இடங்கள் இருக்கு. நீங்க நம்பலல... இதோ இந்த படங்கள பாத்துட்டு வாங்க
நள்ளிரவு சூரியன், நார்வே
நார்வே நாட்டின் அட்லா பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சூரிய வெளிச்சம் வீசும் ஒரு அழகிய ஏரியும், மலையும் காண்கிறோம்
நார்வே நாட்டின் மகேரோயா தீவில் வடக்கு கேப் பகுதியில் காணும் சூரிய கதிர்கள். ஆம் இது நள்ளிரவில் எடுக்கப்பட்ட புகைப்படம்
கிரீன்லாந்து பகுதியில் எடுக்கப்பட்ட நள்ளிரவு சூரியன் புகைப்படம்.
அட.. என்ன இது.. ஏதேனும் ஏமாற்று வேலையா என எண்ணி விடாதீர்கள். இந்த இடங்கள் பூமியில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து சூரியன் நள்ளிரவு வரை மாறாமல் இருக்கிறது. வாருங்கள் உலகில் இது போன்று நள்ளிரவு வரை சூரியன் மறையாமல் இருக்கும் இடங்களைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்.