சரி எல்லாமே சொல்லிட்ட.. கடைசி வர அந்த கொலாபா பத்தி எதுவுமே சொல்லலியேனு பொறுமையிழந்தவங்களுக்காக. கண்ணா நீங்க பாத்தது டிரைலர்தான் மெய்ன் பிக்சர் இனிதான் இருக்கு..
ஆமா.. கொலாபா எதனால பேமஸ்?
கொலாபாலதான் பல உன்னத நினைவுச் சின்னங்களும், கேட் வே ஆப் இந்தியா எனும் இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலா அம்சமும் உள்ளது.
கொலாபாவில் செய்யவேண்டியவை
தலைவர் படம் இருக்கட்டுங்க... கொலாபால என்னென்ன செய்யலாம்னு கேக்குறீங்க கரக்ட்டா? பொறுங்க சொல்றேன்.
கேட் வே ஆப் இந்தியாவுக்கு பயணியுங்க.. அதனோட வரலாற்ற தெரிஞ்சிக்கோங்க..
தாஜ் ஹோட்டலுக்கு போங்க. அங்க அழகியல்கள ரசிச்சி பாருங்க.
அங்குள்ள தேவாலயங்கள், உயர கட்டிடங்கள்லலாம் இருக்குற கட்டிடக்கலை நுணுக்கங்கள கண்டு ரசிங்க.
ஷாப்பிங்க் போங்க.. நினச்சத வாங்குங்க.. பேரம் பேசுங்க.. மகிழ்ச்சியா வாங்குனத உபயோகப் படுத்துங்க
சாப்பிடுங்க, குடிங்க அப்றம் சந்தோசமா இருங்க