சூளைமேட்டில் வசித்து வந்த திருமணமான பெண் போண்டா சாப்பிட்டபோது அது தொண்டைக்குள் சிக்கியதால் மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம் எந்த வழியிலும் வரலாம் என்பதற்கு இந்த சம்பவம் முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. தொண்டையில் பரோட்டா, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடும் போது திடீர் விக்கல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால் இந்த பட்டியலில் போண்டாவும் தற்போது இடம்பெற்றுள்ளது.